உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* . . . . . .” - த. கள்ளும் கனஅடி 79 ருெருவன் கையில் விளக்கேந்திப் புகுந்து தேடியதற்கு ஒப்பாகும் என்பர் திருவள்ளுவர். நீருள்ளே நெருப்பால் எரியும் விளக்கை அவியாது கொண்டு செல்லுதல் இயலா தன்றே ! அதுபோலவே கள்ளுண்பார் உள்ளத்தில் அறிவுடையார் கூறும் காரணங்கள் செல்லாவாகும், "கணித்தானக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானத் தீத்துரீஇ யற்று' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். தல்லறிஞர் சொல்லும் அறிவுரையைச் சிறிதும் கொள்ளாத களிமகளுயினும் அவனும் திருந்த வேண்டு மெனத் திருவள்ளுவர் கருதுகிருர். அவனுக்குப் பெரிதும் இரங்கிப் பேசும் அப் பெருநாவலரின் திருவுள்ளத்தை என்னென்பது! கள்ளுண்ணுப் போழ்தில் கணித்தானக் காணுங்கால் உள்ளான்கொல் உண்ட்தன் சோர்வு' என்பது அவர் சொல்லமுதம் அன்ருே கள்ளுண்ணும் களிமகன் அதனை உண்ணுது தெளிந்திருக்கும் வேனே யில் கள்ளுண்டு அறிவிழந்து சோர்ந்துகிடக்கும் ஒருவனது அவலநிலையைக் காணும்பொழுதேனும், யானும் கள்ளுண் டால் இவ் இழிநிலையைத்தானே அடைவேன் என்று எண்ணமாட்டானுே ரீ அதனைப் பலகால் எண்ணி உணர்ந்த காலத்திலேனும் உள்ளம் மாருகுே ? என் றெல்லாம் இரங்குகிருர் வள்ளுவர். கள்ளுண்டலால் விளேயும் கேடுகளேயெல்லாம் தொகுத்து ஒரு பாட்டில் உரைத்துவிட்டார் விநாயக :புராணத்தார்.