உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& வள்ளுவர் சொல்லமுதிக் "அறிவை அழிக்கும் செயலழிக்கும் அழிய மானம் தனயழிக்கும் செறியும் அறிஞர் மதியாத செருக்கை விளக்கும் ஈன்ருளும் முறியும் வெறுப்பு மிகவினைக்கும் முனிவு விளக்கும் பகையஞ்சாக் குறிகள் விளக்கும் நகைவினைக்கும் கொள்னேல் கள்ளுண் டலைறைந்தா !” கன், தன்னை உட்கொள்வானது அறிவை அழித்து விடும். அவன் செய்யும் செயல்களையெல்லாம் சீரழித்து விடும். அவனது மானத்தைக் கெடுத்துவிடும். செருக் குற்று அலயுமாறு செய்யும். அவனைப் பெற்ற அன்னே பும் வெறுத்து விரட்டுவாள். அவனது உள்ளத்தில் கோபம் கொந்தளிக்கும். அவனுக்குப் பகைவர் சிறிதும் அஞ்சார். எல்லோரும் அவனே இகழ்ந்துரைப்பர். இத்தகைய பல தீமைகளுக்கு உள்ளாக்கும் கள்ளால், உண்டவர்க்கேயன்றித் தொடர்புடைய பலர்க்கும் தரகம் கிடைக்கும் என்று நவின்ருர் மற்ருெரு புலவர். கள்ளை விலைக்கு விற்பவர், கள்ளருந்த இசைந்தவர், கள்ளுண் டாரைக் கண்டு மகிழ்ந்தவர் ஆகிய பிறரும் மீளாத தசகி னில் வீழ்வர் என்று அறிவுறுத்தினர். நீதியை ஒதவந்த வேதநாயகர் தெருவில் நடந்த நிகழ்ச்சியொன்றைச் சிறந்த பாடலாகப் புனைந்து தந்தார். வழிநடுவே பிணமொன்று கிடந்தது. அதனை நாயும் பறவையும் சூழ்ந்து வட்டமிட்டன. அதைக்கண்ட சிலர், இப் பிணத்திற்கு உரியவர் எவரும் இலச்போலும் என்று. எண்ணிச் சுடுகாடு தூக்கிச் சென்றனர். கட்டைகளை அடுக்கி, அவற்றின்மேல் அப் பிணத்தைக் கிடத்தி,