பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍望 ள்ைளுவர் சொல்லமுதம் தகாதோளனின் வென்றிடினும் சூதினை வேண்டற்க' என்று பேரன்புடன் கூறினர். அங்கனம் தாம் கூறுதற். குரிய காரணத்தையும் அக் குறட்பாவிலேயே குறிப்பிடும் சிறப்பை என்னென்பது! மீன் பிடிப்பவன் தூண்டிலின் நுனியிலுள்ள இரும்பினை இரைப்பொருளால் மறைத்து நீருள் மிதக்க விடுகிருன் இரையால் மறைந்த இரும்பின இரையென்றே கருதி மீன் விழுங்குகின்றது. அதில் சிக்குண்டு உயிர் இழக்கின்றது. அதைப் போலவே சூதாட்டத்தில் வென்று வந்த பொருளும் இழந்து சூதாடி யவனும் கெட்டொழிவான். சூதில் வென்று கொண்ட பொருள், மேலும் சூதாட்டத்தில் விருப்பினை உண்டு பண்ணி, அதனின்று நீங்காதிருப்பதற்கு இட்டதொரு தளையாகும். அதனுல் எல்லாப் பொருளும் இழத்தற்கு ஏதுவாதும் சூதாட்டத்தில் ஒருகால் வென்றவர் இன்னும் வென்று பெரும்பொருள் பெறுவோம் என்னும் கருத்தால் மிக்க பொருளேப் பனையமாக வைத்தாடுவர்; அத்தனையும் இழந்து அல்லலுறுவர். இத்தகையார்க்கு 'அறனும் இன் பமும் அடைந்து வாழும் நல்வாழ்வு உண்டோ ?" என்று கேட்பார் திருவள்ளுவர். சூதாடுவார்க்கு முன்னில்லாத துன்பங்கள் பலவும் வந்து வருத்தும். அதைப்போல வறுமையைக் கொடுக்கும் செயல் வேருென்றில்லை. சூதாடுவார் எப்போதும் சூதின் வெற்றி தோல்விகளைப் பற்றிய தினைவாகவே இருப்பர். அதனுல் ஒருபோதும், வயிருர உண்ணமாட்டார். மற்றைய பொறிகளால் பெறும் இன்பத்தையும் எண்ணமாட்டார். பொய்யும் கனவுமாகிய பாவங்களேயே ஈட்டுவராதலின் மறுமையில் நரகத்தையுறுவர். தொன்றுதொட்டு வந்த அவரது: நற்குணங்கள் தோன்ருதொழியும். -