உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளும் கனஅம் శ్రీశ్రీ ஒருவன் சூதினை இன்பப் பொழுது போக்கிற்காகக் கொள்ளும் விநோதத் தொழிலாகவும் விரும்புதல் தகாது. நாளடைவில் காலமெல்லாம் அதுவே வேலையாக அமைந்து எல்லாம் இழத்தற்குக் காரணமாகும். சூதாடத் தொடங்கியவன் புகழும் கல்வியும் செல்வமும் ஊனும் உடையுமாகிய ஐந்தும் இழந்து வருந்துவான். இங்ங்னம் இருமைப் பயன்களையும் இழக்குமாறு செய்யும் சூதினைப் போல் கொடியது வேறில்லே. புகழேந்தியார் சூதால் விளையும் தீமைகளைத் தொகுத் துக் கூறியுள்ளார். சூது, ஒருவனது அழகிய உருவைச் சிதைக்கும். பொய் பேசுமாறு செய்யும். வளமான செல்வத்தைக் கெடுக்கும். மானத்தை ஒழிக்கும். நட்பை அழிக்கும். இன்னும் எத்தனையோ கேடுகளை விளக்கும் என்று கிளந்தார். 'உருவழிக்கும் உண்மை நலனழிக்கும் வண்மைத் திருவழிக்கும் மானம் சிதைக்கும்-ஒருவர் ஒருவரோடு) அன்பழிக்கும் ஒன்றல்ல சூது பொருவரோ தக்கோர் புரிந்து' என்பது அவரது பாடலாகும். ஒருவன் பல நூல்களையும் ஆராய்ந்து கற்ருன். சான்ருேரால் சிறந்த அறிஞன் எனப் போற்றவும் பெற்ருன். இத்தகைய மேன்மை புற்றவன் ஒருகால் சூதாடிஞன் என்று பிறரால் பேசப்படுவானுயின் அவனது பெருமையெல்லாம் அப்பொழுதே மறைந்தொழியும் என்ருள் முனைப்பாடியார். 'ஓதலும் ஓதி உணர்தலும் சான்ருேரால் மேதை எனப்படும் மேன்மையும்-சூது