உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றமும் சுற்றமும் 37. எண்ணுவார்க்கு உலகில் எவருமே உறவினராக அமை யார். ஆதலின் பிறரது குற்றத்தை ஆய்வார் அறிவுடைய ரல்லர் மற்றவர் பால் காணும் குணங்களையே ஆசாய வேண்டும். நற்குணங்கள் மிகுதியாக அமைந்த தகுதி யுடையாராயின் அவரையே உற்ற உறவினராக ஏற்று ஒழுகுதல் வேண்டும். இத்தகைய பல கருத்துகளேத் தன்னுள் பொதிந்து விளங்கியது புலமைச் செல்வியாரின் பொன்மொழி, சான்ருேர், பிறர்பால் தோன்றும் குணங்களேயே தெரிந்து பாராட்டுவர். பிறரது குற்றத்தை மறைத்தே பேசுவர். கீழ்மக்கள் எப்போதும் மற்றவர்.பால் உள்ள குற்றங்களேயே கூர்ந்து நோக்குவர். அவற்றையே எடுத்துக்கூறி இகழ்ந்துரைப்பர். பிறர்பால் எத்தனை குணங்கள் விளங்கிசூலும் அவற்றுள் ஒன்றையேனும் அவர்கள் உணரார். ‘அற்றம் மறைக்குக் பெருமை, சிறுமைதான் குற்றகே கூறி விடும்' என்பது வள்ளுவர் சொல்லமுதமன்ருே ! புறங்கூறும் புன்மையுடைய கீழ்மக்கள் பிறரிடத் துள்ள குறைகளைக் கூர்ந்து நோக்கியிருப்பர். அங்ஙனம் பிற குற்றம் காணும் பெருங்குற்றம் தம்பால் உள்ளதே என்பதை அக் கீழ்மக்கள் சிறிதே அறிவராயின் மின் ணுயிர்க்கு இன்னல் உண்டாகுமோ ? என்று கேட்பார் திருவள்ளுவர். 'ஏதிலகர் குற்றம்போல் தன் குற்றம் காண்கிற்.பின் தீதுண்டே மன்னும் உயிர்க்கு' என்பது அவர் சொல்லமுதமாகும். மற்றவரால் பெரிதும் மதிக்கப்படவேண்டும் என்று எண்ணும் ஒருவன் பிறர்