குதிறமும் சுற்றமும் 3% அறிவு முதலிய சிறப்புக்களால் ஏற்படும் பெருஞ்செருக்கே மதம் எனப்படும். இவ் இயல்புகள் எல்லாம் மக்கள் பால் ஓரளவில் அடங்கி நிற்குமாயின் அவற்றைக் குற்றமென எவரும் குறைத்துப் பேசார், எல்லை கடந்து எல்லோரும் அறியும் அளவில் இக் குற்றங்கள் மிகுந்து நிற்குமாயின் பிறர் இகழ்தற்குக் காரணமாகும். அறிவுடையார் அறுவகைக் குற்றங்களும் தம்பால் நிகழாத வண்ணம் காத்துக் கொள்வர். இவை குற்றம் என்பதையே அறியாத கீழோர் இக் குற்றங் களையே பெரிதும் செய்வர். பிறர்பால் இக் குற்றங்களைக் காணவும் மகிழ்வர். தம்மினும் குறைவாகக் குற்றம் புரியும் கயவரை இகழ்ந்து பேசித் தாம் இறுமாப்புக் கொள்வர். ‘நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே' என்பது பொன் முடியாரது நன்மொழியாகும். மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி என்பது இந் நாட்டுப் பழமொழி' ஆதலின் அரசனே மக்களுடைய நல்லொழுக்த்திற்குக் காரணமாவான். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்ற ஆன்ருேர் வாக்கும் அதனையே வலியுறுத்தும். ஆகையால், நாட்டை ஆளும் அரசரிடத்தும் தலைவரிடத் தும் இவ் அறுவகைக் குற்றங்கள் இருத்தல் தகாது. இக் குற்றங்கள் இல்லாத மன்னரது செல்வமே மேன்மேலும் செழித்து நிலத்திருக்கும். அதுவே நல்வழிகட்கு உதவுவதாகும். 'செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். அளவிறந்த காமம் சிறுமையை விளைப்பதாகலின் அதனைச் சிறுமை
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/95
Appearance