100 வள்ளுவர் சொல்லமுதம்
- உயர்வகலம் திண்மை அருமை.இந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.’ என்பது அவர் சொல்லமுதமாகும். மதிற்கூவரின் அடிப்படை அதன் உயரத்திற்குச் சமமான அளவாகவோ, பாதி அளவாகவோ, மூன்றில் ஒரு கூறு அளவாகவோ இருத்தல்வேண்டும். அதன் அகலம், உயரத்தில் பாதியளவு இருத்தல் வேண்டும். அதன் உயரம், பகைவரால் கடக்கலாகாத வாறு மிகவும் உயர்ந்திருக்கவேண்டும். இங்கனம் மதிலமைப்புப் பற்றிச் சுக்கிரநீதி சொல்லும். பகைவர் மதிலருகே நெருங்காதவாறு பற்பல பொறிகள் அ. க ன் பால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாண்டியன் நெடுஞ்செழியன் ஆண்ட காலத்தில் மதுரைமாநகரின் மதிலிடத்தே அமைந் திருந்த அரும்பொறிகள் பலவற்றைச் சிலம்புக் காவியம் விளம்புகின்றது. தானே வளைந்து அம்புகளே எய்யும் வலிய இயந்திர வில், குரங்குபோல் விளங்கிக் குறுகினரைக் கடிக்கும் கடர்மையான பொறி, கல்லுமிழும் கவண்பொறி, கவ ணுக்கு வேண்டும் கற்களைத் தாங்கும் கூடை, காய்ந்து சிதறிச் சேர்ந்தாரை வருத்தும் செய்மிடாக் கள், பகைவர்மீது எறிந்து வருத்தும் எஃகு உருக்கு உருகும் உலேகள், மதிலேப் பற்றுவாரைக் கோத் திழுக்கும் தாண்டிற் பொறி, கழுத்தில் பூட்டி இழுத்து முறுக்கும் சங்கிலிப் பொறி, ஆண்டலைப் புள்ளின் வடிவில் பறந்து சென்று பகைவர் தலையைக் கொத்திக் கடிக்கும் பொறி, மதிலேப் பற்றி ஏறுவாரை மறியத் தள்ளும் இருப்புக்கவை, கழுக்கோல், அம்புப் பொதி,