துறவும் உணர்வும் 器 அவர்களே அந்தணர் என்போர் அறவோர்’ என்று குறித்தருளினர் திருவள்ளுவர, அருள் முதலான ஒன்பது நோன்புகளையும் மற வாது கொண்டொழுகும் துறவோர்க்கு மெய்ஞ்ஞானம் கைவரப் பெறும். அதற்கு கிலேயாமை பற்றிய ஞானம் முதற்கண் கிட்டவேண்டும். இதனை நான்கு அதிகாரங்களால் வள்ளுவர் விளக்கியுள்ளார். கிலே யாமையை விளக்கத் தலைப்பட்ட அப்புலவர், கிலே யற்ற பொருள்களை நிலைபெற்றன என்று நினைக்கும் இழிந்த அறிவைக் கடிந்துரைத்தார். பின்னர்ச், செல்வம் நில்லாத இயல்புடையது; அது கல்வினையால் ஒருவனுக்கு வருமாயின் அப்பொழுதே கிலேபேறு டைய அறங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். நாடகத்தைக் காணுதற்கு காடி வரும் மக்களைப் போன்றே ஒருவனுக்கு நல்வினை உளதாகும்வரை செல்வம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும். அங்கல்வினை உலந்துவிட்டால் செல்வமும் அவனைவிட்டு அகன்றுவிடும் என்று குறித்தருளினர். அதன்பின் யாக்கை நிலையாமையை வலியுறுத் தினர். மக்கள், நாளை ஏதோ ஒருகால வரையறை என்று கருதுகின்றனர். அஃது அறியாமையன்ருே! ஒவ்வொரு நாளும் உயிரை அணுஅனுவாக, அறுத் துக் குறைத்துக் கொண்டிருக்கும் வாள் என்பதை அவர்கள் உணர்ந்தாலன்றே இவ்யாக்கையின்மீது கொண்ட பற்று அகல்வதாகும் என்று விளக்கினர் திருவள்ளுவர். ஒருவன் கேற்று உயிரோடிருந்தான்; அவன் இன்று இறந்துபோனன் என்று எண்ணி வருந்தும் கிலேயிலன்ருே மண்ணுலக வாழ்வு உள்ளது
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/11
Appearance