அானும் உசலும் 103 'சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை ஊக்கம் அழிப்ப தரண்.: என்பது அவர் சொல்லமுதமாகும். i கு ஒரு நாட்டின்மேல் மற்ருெரு நாடு படையெடுக்கு மாயின் முதலில் அங்காட்டுள் உணவுக் குறையைப் பகைவர் உண்டு பண்ணுவர். அயல் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் அங்காட்டுள் வாராதவண்ணம் தடுப்பர். இஃது இப்பொழுதும் காணப்பெறும் போர் முறையாகும். திடீரென்று பகைவர் படைகள் ஒரு நாட்டு அரணே முற்றுகையிட்டுக் கொண்டால் அகத் துறைவார் புறத்தே போகவும் புறத்துச் சென்மூர் உள்ளே புகவும் இயலாதன்ருே அங்கிலையில் அகத் துறையும் படைவீரர் முதலாயினர்க்கு இன்றியமை யாத உணவுப் பொருள் போன்றவை புறத்தே யிருந்து வருதற்கு வழியிலதாகும். பகைவர் முற்றுகை பன்னுள் நீடித்து அரணகத்தார் உயிர்வாழ உ வுக்கும் வகையற்று விடுமாயின் அன்னர் பகைவர்க்கு அடிபணிய வேண்டி வரும். ஆதலின் அரண்கக் தார்க்கு வேண்டும் உணவுப் பொருள் மிகுதியும் தன்னகத்தே பெற்றிருக்கவேண்டும் என்று குறித் தார் பெருநாவலர். இஃதன்றி அகத்துறையும் படைவீரர் புறத்தார் மேல் செலுத்தும் படைகள் எளிதிற் சென்று காக்கு தற்குரிய முறையில் அரண் அமைந்திருக்க வேண்டும். புறத்துறையும் பகைவர் அரணுள் போக்கும் படைகள் அகத்தாரைத் தாக்காது தடுக்கும் தகுதியுடைய தாகவும் அவ் அரண் அமைந்திருக்க வேண்டும். மதி லுள் கின்ற போராற்றும் விபர்க்கு விசாலமான
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/111
Appearance