உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வள்ளுவர் சொல்லமுதம் பதனப் பரப்பும் வேண்டும். இவ்வியல்புகளை யெல் லாம் விளக்கப் போந்த பொய்யில் புலவர், கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் தில்க்கெளிதாம் நீர தரண்.: என்று கூறியருளினர். கடையெழு வள்ளல்களுள் ஒருவகிைய பாரி பறம்புகாட்டை ஆண்டு வந்தான். முல்லைக் கொடிக்கும் நல்லருள் காட்டித் தனது பொற்றேரை வழங்கிய பெருவள்ளல் அவன். முந்நூறு ஊர்களைத் தன்னகத்தே கொண்ட அவனது பறம்பு நாடு, நாப்பண் அமைந்த பறம்பு மலேயைச் சுற்றிப் பரந்து அமைந்திருந்தது. அவன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்' என்று பாராட்டும் பெருமை பெற்றவன். குறுகில மன்னனுகிய பாரியின் பெரும்புகழ் பாரெங்கும் பரவி நிற்றலைக் கண்ட தமிழ் மூவேந்தரும் அவனது பறம்பு மலேக் கோட்டையைப் படையுடன் சென்று முற்றுகையிட்டனர். மூவேந்தர் முற்றுகை பல நாள் நீடித்தும் பாரி பணியவில்லை. அவனது மலையானும் வலிமை சான்றதாகத் தோன் றியது. எனினும் அம்முடிமன்னர் அரணேவிட்டு அகன்ருரல்லர். மூவேந்தர் கிலேயைக் கண்டு பாவேந்தராகிய கபிலர் இரங்கினர். அவர் பாரியின் ஆருயிர் நண்பர்அறிவுசால் அமைச்சர்-அவையணி செய்யும் அருங் தமிழ்ப் புலவர். இத்தகைய கபிலர், முற்றுகையிட்ட மூவேந்தரையும் நெருங்கினர். முடிமன்னர்களே ! விேர் கிலந்தொறும் நிறுத்திய தேர்களே மிகவும் படைத்திருப்பினும் மரந்தொறும் கட்டிய களிறு