உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசனும் உரனும் 107 முடியாத பெற்றியுடையதே பேரரண் என்று கூறினர் கம் பெருநாவலர். "முற்றியும் முற்ரு தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண்.: என்பது அவர் சொல்லமுதமாகும். பெரும்படை திரட்டி வந்த பகைவர் இவ்,அரனே எவ்விதத்திலும் கைப்பற்றியே தீருவோம் என்று வீறுடன் முற்றுகையிட்டிருந்தாலும், அகத்துறை வார் அவ்விடத்தினின்று அகலாது புறத்தவர் படை யெல்லாம் பாழுற்றுப் புறங்காட்டி யோடுமாறு போர் செய்தற்குரிய வாய்ப்புக்களைப் பெற்றுள்ள அரணே பேராற்றல் உடையது. அனைத்திற்கும் மேலாகச் செயல் திறமை வாய்ந்த சீரிய பேரறிவாளர்கள் பலரை, அரண் தன்னகத்தே பெற்றிருக்கவேண்டும். காலமும் இடமும் தெரிந்து பொருந்திய செயலேப் புரிதற்கு வழிகாட்டும் நல்லறிவாளர்கள் நாட்டிற்கு இன்றியமையாதவர்கள். அவர்கள் இலராயின் அரண் எத்துணே உானையுடையதாக இருந்தாலும் பயனில்லே என்பார் நம் பழந்தமிழ்ப் புலவர். எனேமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண்.' என்பது வள்ளுவர் சொல்லமுதமன்ருே ! நம் தமிழகப் பெருவேந்தர் தம்மதிற்புற வாயிலில் மகளிர்க்குரிய சிலம்பும் தழையும் பந்தும் பாவையும் தொங்கவிட்டிருந்தனர். அடுதல் வல்ல வீரர் அவ் அரனுள் புகுதல் அரிது; ஆடல் வல்ல மகளிர் ஆங்குப்