களவும் காமமும் 15 - தெரியாது. அவன் அக்களவினலேயே அழிவைப் பெறுவான். அவனுடைய உயிர் எப்பொழுதும் அழிவுப்பாதையைநோக்கி ஊசலாடிக்கொண்டுதான் இருக்கும். களவைச் செய்யும் பொழுது பிறர் கையில் அகப்பட்டுக் கொண்டால் அரசால் ஒறுக்கப்படுவது உறுதியன்ருே அவ்ஒறுப்பும் பொறுக்கவொண்ணுத கொடுமையாக இருக்கும். இத்தகைய பெருந்திய ருக்கு உள்ளாவான் கள்ளன் என்பதை வள்ளுவர், கள்வார்க்குத் தள்ளும் உயிர் நிலே கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு." என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். களவைக் கனவிலும் கருதாத பெருமக்களுக்கு விளையும் பெரும்பயனையும் ஒருங்கு குறித்தார் உயர் நாவலர். அவர்கட்கு வானவருலகம் கப்பாது வாய்க்கும். பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்தல் மட்டுமே களவெனப் படு வ தன் று. கன்னம்வைத்தல், கொள்ளையிடுதல், செல்லாக் காசைப் பிறர்பால் சேர்த்தல், பொய்ச்சீட்டு எழுதுதல், கையூட்டுப் பெறுதல் ஆகிய இவை எல்லாமே களவின்பாற் படு வனவாகும். தெருவிலோ பிறிதோர் இடத்திலோ கண்டெடுத்த பொருளே உரியவர்.பால் கொண்டு சேர்க்காது துய்த்தலும் களவே. ஒருவன் களவாடி வந்த பொருளைப் பிறன் வாங்குதலும் களவேயாகும். வாங்கிய கடனைக் கொடாது வஞ்சித்தாலும் அது களவுதான். பொருளாசையால் பொய் வழக்காடு வதும், அருளின்றித் தொழிலாளர் கூலியைக் குறைப்பதும், பிறர்க்கு நட்டம் விளைப்பதும், கம்பித்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/23
Appearance