களவும் காமமும் 17 ரேனும் கண்டு கொள்வாரோ என்ற அச்சமே அவர்கள் அகத்தில் நிறைந்திருக்கும். களவால் வந்த பொருளைத் துய்க்கும்போதும் அவர்கட்கு மிக்க அச்சமே. இங்கனம் அச்சத்தால் அவலமுறும் தவருன செயலுக்கு மனம் துணியாவண்ணம் வாழும் வாழ்வுக்கு வரக்தருமாறு வேண்டினர் ஆண்டவனே நோக்கி வேதநாயகர் : ‘அரந்தைகு ழினும்பொன் வள்வும் அத்தொழிற் கியையா வண்ணம் வரந்தர வேண்டு மென்னக் கடவுளை வழுத்தாய் நெஞ்சே! என்பது அவர் கெஞ்சிற்குக் கூறும் நீதிமொழியாகும். ஒருவனுக்கு உரிமையான பொருள்கள் பல வற்றுள் தலைமை வாய்ந்த பொருள் மனைவியே. அத்தகைய பிறன் மனையாளை விரும்புவதும் பெருங் குற்றமே. அதுவும் களவின்பாற்பட்ட பிழையே யாகும். இதனேக் காமமயக்கம் என்பர் கற்றேர். ஒருவன் தன் மனைவியிடத்துக் கொள்ளும் காதல் விருப்பினை நேர்மையான காமமெனக் கூறுவர் சான் ருேர், சிற்றின்ப வேட்கைப் பெருக்கால் சீர்கெட்டுச் செல்லும் காமக்கருத்தே தவறுடையதாக இகழப் படும். முற்றுங் துறந்த முனிவன் கான் மேற்கொண்ட துறவு நெறிக்குப் புறம்பாகக் காமவேட்கை கொள் வானுயின் அதுவும் மன்னிக்க முடியாத பெருங்குற்ற மாகும். இங்ஙனம் அறத்திற்குப் புறம்பான வரம்புமீறிய காமமயக்கினைத் திருவள்ளுவர் இல்லறத்தார்க்குப் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்திலும் துற வ. சொ.-IV-2
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/25
Appearance