உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வள்ளுவர் சொல்லமுதம் இன்னுயிருடையரேனும் இறந்தாரேயாவர் என மொழிந்தருளினர் கம் முதுபெரும் புலவர். விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்." என்பது அவர் சொல்லமுதமாகும். காம மயக்கத்தால் தினையளவும் தமது பிழையை உணராது பிறனது மனேக்குட் புகுவாராயின் அவர் எத்துணேப் பெருமையுடையாாயினும் சிறுமை யடைவது உறுதியே. செல்வத்தாலோ திறமையாலோ உடல் வலிமையாலோ பெருமையுற்ருர்க்குப் பிறன் மனைவியை விரும்பிப் பெறுவது எளிதாக இருக் கலாம். அவர்கள் இவ் இழிசெயலில் இறங்குவா ராயின் என்றும் நீங்காது கின்று ஒங்கும் குடிப்பழி யைத் தேடிக்கொள்வர். அவர்களிடம் குடிப்பழியே யன்றிப் பகை பாவம் அச்சம் ஆகிய குற்றங்க ளெல்லாம் அகலாது நிற்பனவாகும்.

  • பகைபாவ மச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.: என்பது அதனே வலியுறுத்தும் வள்ளுவர் சொல்லமுத மாகும். - பிறன் மனைவியைக் காம விருப்புடன் நோக்கா திருப்பதே போறம் என்று பேசுவார் நம் பெரு காவலர். அதனைப் பேராண்மை என்றும் பாராட் டுவார். அத்தகைய நல்ல பண்பினைச் சான்றேர்க்கு ஆன்றமைந்த அறமும் ஒழுக்கமும் என்று வியந்து போற்றுவார். உலகில் எல்லா நன்மைகளும் எய்துதற் குரியார் அவர்களே என்றும் அறுதியிட்டுரைப்பார் அப் பெரும்புலவர்.