களவும் காமமும் 21
- பிறன்மன நோக்காத பேராண்மை சான்ருேர்க்(கு) அறனென்ருே ஆன்ற வொழுக்கு.? » என்பது அவர் சொல்லமுதமன்ருே
பிறன் மனே நோக்கும் பேதையர்க்கு வேதநாயகர் ஒதும் நீதிமொழி உயர்ந்த உறுதிமொழியாகும். ஒருவன் தன் மனைவியைப் பிறைெருவன் காமக் கருத்துடன் நோக்குவாயிைன் அவன் உள்ளத்தே கொடுங்கோபம் கொந்தளிக்குமன்ருே அஃதே போல் பிறன் மனைவியைத் தான் நோக்கினும் அத்தகைய சினம் அவனுக்கு எழும் என்பதை ஏன் உணராதிருக்கிருன் ! அங்ஙனம் உணர்வானுயின் அயலான் மனைவியை அன்னையென்றும் உடன் பிறந்தவள் என்று மன்ருே எண்ணுதல் வேண்டும் ! என்று அறிவுறுத்துவார் அவ் அறிஞர். தன்னைப்போற் பிறரை எண்ணல் தகுதியாந் தான் மணந்த மின்னப்போல் இடையி குளே விழியினுல் நோக்கு வாரைத் தின்னல்போல் முனிவு கொள்வோன் அயலவன் தேவி தன்னை அன்னேசோ தரிபோல் எண்ணு(து) அணந்திட விரும்பல் என்னே! என்பது அவ் வேதநாயகரின் திேப் பாடலாகும். உலகில் சிலர் ஆண்தன்மை குறைந்து பெண் தன்மை மிக்க பேடிகளாகவும், பெண் தன்மை குறைந்து ஆண்தன்மை மிக்க அலிகளாகவும் இருக்கக் காண்கிருேம். அவர்கள் வாழ்வு அவலங் தரும் இழிவுடையதே. இம்மையில் அவர்கள் இங்ங்ணம் பிறக்கக் காரணம் முன்னைப் பிறவியில்