உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வள்ளுவர் சொல்லமுதம் உண்மையை அறிந்து உள்ளம் நடுங்கிக் கள்ளம் ஒழிவதே தெள்ளிய அறிவுடைமையாகும் என்று அறிவுறுத்தினர் அத் தெய்வக் கவிஞர். " வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின்-வஞ்சித்த எங்கும் உளனுெருவன் காணுங்கொல் என்றஞ்சி அங்கம் குலேவ தறிவு." என்பது அவர் நீதிநெறி விளக்கம். துறந்தார் கொள்ளும் தூய தவக்கோலம் வான் போல் உயர்ந்த பெருங்கோலமாகும். அவர்கள் காம வயப்படுதல் கடுங்குற்றம் என்பதை கன்முகக் கண்டவர்கள். அங்ஙனம் அறிந்து வைத்தும் அவ் இழிசெயலுக்கு உளந்துணிவாராயின் அவர்களது பெருந்தவக்கோலத்தால் யாது பயன்? என்ருர் வள்ளுவர். அவர்களது குற்றத்திற்குக் கழுவாய் இல்லை; எரிவாய் நரகத்து விழுதலே அதற்குத் கண்டனே என்று அறிவுறுத்தினர். புலி பசித்தாலும் புல்லைத் தின்னது என்பது பழமொழி. பசு தனக்குரிய புல்லேவிட்டுப் பிறர்க்குரிய பசும் பயிரை மேய விரும்பிற்று. அது பசும் பயிரை மேய்ந்தால் காவலர் காய்ந்து தடிகொண்டு தாக்கிக் கடிவர். அங்கனம் அவர் தாக்காவண்ணம் தன்னைக் காக்க எண்ணிய பசு தன்மீது புலித்தோலைப் போர்த்துச் சென்று பசும் பயிரை மேய்ந்தது. சேய்மையில் கின்று அதனைக் கண்ட காவலர் ஐயோ! புவியெனக் கதறி ஓடினர். மேலும் அது பயிரைத் தின்னது என்று எண்ணி அகன்றனர். பசுவோ தான் வேண்டுமளவும் அப் பயிரைத் தின்று சென்றது.