32 வள்ளுவர் சொல்லமுதம் நாள்தோறும் கானுகின்ற வாய்ப்பைப் பெற்ருலுங் கூடப் பெரும்பாலான மக்கள்,
- நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல்.’ எனவே எண்ணிப் பிறர்க்கு உதவ மறுக்கின்றனர். அத்தகைய இழிந்த மக்களுக்கு இடித்துரைக்க வந்த தமிழ் மூதாட்டியார், ஒருவனுக்கு நீ உதவி செய்தால் மீண்டும் அவன் நமக்கு உதவுவானே, மாட்டானே என்று எண்ணவே செய்யாதே; உறுதியாக கினக்கு மனக்கினிய நன்மைகள் வந்துறும் ; அதற்குச் சான்று, இதோ தோன்றும் தென்னே மரமே ; அது தாளுண்ட நீரைத் தலையாலே தண்ணிய இளநீராக்கித் தருவதைப்பார்! என்று பிறர்க்கு உதவும் போறத்தை விளக்கியருளினர். *
- நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தல்யாலே தான்தருத லால்.’ என்பது அத் தமிழ்ச் செல்வியாரின் மூதுரை. பிறர் செய்த உதவியின் பயனே அளந்தறிவார் உலகில் அரியர். பயன் தெரியும் பண்புடைய நன்மக்களுக்கு கன்றியொன்று செய்தால் அது தினையளவினதாயினும் பனையளவினதாக மதித்துப் பாராட்டுவர். அப் பயனே அறியாத கயவர்க்குப் பன யளவு பேருதவியைப் புரிந்தாலும் இவர் யாது செய் தனர் என்றே இகழ்வர். இக் கருத்தை விளக்கும்,
- தினத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் .
கொள்வர் பயன்தெரி வார்.’ -