உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியும் நடுவும் 器器 என்னும் வள்ளுவர் சொல்லமுதச் சுவையினை அள்ளிப்பருகிக் கண்ட சமணமுனிவர் ஒருவர், நன்றி யின் பயனறியாத புல்லர் இயல்பையும் சேர்த்துச் சொல்லினர். திண்யனைத்தே பாயினும் செய்ததன் றுண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்ருேர்-பனையனத்(து) என்றும் செயினும் இலங்கருவி தன்னுட! நன்றில நன்றறியார் மாட்டு.” என்பது அவரது நாலடிப் பாடலாகும். இன்பத்தில் பங்குகொள்ள எத்துணேயோ மக்கள் விரைந்து வந்து கூடுவர். துன்பத்தில் பங்குகொள் ளவோ, அதனைத் துணையாக நின்று போக்கவோ, அதனின்று காக்கவோ முற்படுவார் இம் மூதுலகில் மிகவும் அரியர். ஆதலின் துன்பக் காலத்துப் பற்றுக்கோடாயிருந்து துயர்போக்கிய கல்லோரை எந்நாளும் துறவாதொழிக என்று அறிவுரை வழங் கினர் பெருநாவலர். மாசற்ற மனத்தினரே அத் துயர் துடைக்கும் தாயோராதலின் அவரது நட்பையும் மறவற்க என்று வலியுறுத்தினர். நல்லோர் அன்னவர் நட்பினை எங்காளும் எண்ணி இன்புறுவதோடல்லாமல் எழு பிறப்பும் தொடர்ந்துவரும் உழுவலன்பராக அவர்களே உளத்தில் கொண்டு மகிழ்வர். இக் கருத்தை வலியுறுத்த வந்த தமிழ் மூதாட்டி யார், கல்லோர்க்குச் செய்த உதவி, கல்மேல் எழுதிய எழுத்துப்போல் என்றும் அவர் உள்ளத்து மறை யாது நின்று நிலவும்; பொல்லார்க்குச் செய்த பேருதவியும் நீர்மேல் எழுதிய எழுத்துப்போல் செய்த அப்பொழுதே அவர் உளத்தைவிட்டு அகலும் என்று உரைத்தருளினர். 3 س-r.-TWتیar. Q