நன்றியும் நடுவும் 39 போல் ஒருபாற் கோடாத உயர்பண்பே நடுவுநிலை எனப்பட்டது. சான்ருேர் பிறரது குறைநிறைகளைக் தடைவிடைகளால் கேட்டு முறையே உள்ளவாறு உணர்தல் வேண்டும். தாம் உணர்ந்தவற்றை மறை யாது பகைவர், அயலார், நண்பர் என்ற கருத்து வேறுபாடின்றி முத்திறத்தார்க்கும் ஒப்பக் கூற வேண்டும். இங்கனம் துலாக்கோலுடன் ஒப்புமைப் படுத்தி நடுவுநிலைமையை விளக்கி யருளினர் ஒப்பில் புலவர். × பட்டினப்பாலே பாடிய பைந்தமிழ்ப் புலவராகிய உருத்திரங்கண்ணனர், காவிரிப்பூம் பட்டினத்துப் பண்டு வாழ்ந்த வணிகரின் நடுவுகிலேமையை விளக்க கல்லதோர். உவமையை எடுத்தாண்டுள்ளார்.
- நெடுதுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சிஞேர்." . என்பது அப்புலவரின் அரிய மொழியாகும். இதில் நுகத்தடியின் நடுவிடம்போல நடுவுநிலை பிறழாத நன்னெஞ்சமுடையார் அந்நகரத்து வணிக மக்கள் என்று குறித்தார். உழவுக் கலப்பையுடன் இணைக் கப்படும் நுகத்தடி நேரான நடுவிடத்தே இணக்கப் பெருவிடின் ஏரில் பூட்டிய மாடுகள் சீராகச் செல்ல மாட்டா. அதுபோலவே நடுவுகிலே பிறழ்ந்த வணிக ரின் வாணிகமும் வளம்பெற்று ஒங்காது தளர்ந்து ‘விடும் என்று குறித்தார் உருத்திரங்கண்ணனர். நடுவுநிலை தவருத நல்லறத்தின் மாண்பை மிகவும் கயம்பட வலியுறுத்தினர் வள்ளுவர். இவ் அறத்தின் வழுவாது ஒழுகும் இயல்பு, எவர்க்கும் எளிதில் அமைவதன்று. ஆதலின் அவ்வறம்