உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை திருவள்ளுவர் பெருமான் அருளிய திருக்குறள் ஒரு தெளிந்த நீரோடை, அஃது ஈரடி ஆழமுடையது போல் தோன்றுகிறது. ஆனல், அங்ேேராடையில் மூழ்குவார்க்கு ஆழத்தின் எல்லே அறிய முடியாத அருமையுடையதே யாகும். அதன்கண் ஆழ்ந்து மூழ்கிக் கூர்ந்து நோக்கினல் மணியும் பவளமும் அனேய கருத்துக் குவியல் கனக் கிறந்து கிறைந்து கிடப்பதைக் காணலாம். அத்தகைய கருத்த மணிகள் உளத்தைக் கவரும் உயர்விடையனவாகவும், பிற ஆசிரியர்கள் விரித்துப் பேசும் கருத்தொளிகளையெல்லாம் தம்முள் அடக்கியொளிரும் செம்மையுடையனவாகவும் சிறந்து விளங்குகின்றன. அவற் றின் சிறப்பை ஒரளவு அறியும் பேறுபெற்ற எளியேனும் வள்ளுவர் சொல்லமுதம் என்ற பெயருடன் மூன்றி புத்தகங்களே ஆக்கினேன். இந்நூல் அவ்வரிசையில் நான் காவது புத்தகமாக வெளிவருவது. முன்னேய மூன்று புத்தகங்களையும் தமிழுலகம் வரவேற்றுப் போற்றிய மாண்பைக் கண்டு மகிழ்வுற்ற எளியேன் மீண்டும் அப் பணியை மேற்கொண்டு நான்காவது புத்தகத்தை கல்வி யுள்ளேன். இதனையும் அங்ஙனமே ஏற்றுப் போற்றும் என்னும் உறுதியுடையேன். . வள்ளுவர் சொல்லமுதைச் சமைப்பதில் எனக்குத் தளராத ஊக்கத்தைத் தந்து பேணிவரும் பெருநோக் குடைய கழக ஆட்சிப்பொறுப்பாளர் திருவாளர் வ. சுப்பையாப் பிள்ளையவர்கட்கு எனது இதயங் கலந்த நன்றியும் வணக்கமும் என்றும் உண்டு. தமிழ் வேல்க ! அ. க. நவநீதகிருட்டிணன்