ஊழும் தாளும் 67 குசேலர் வறுமையிலேயே வாழ்ந்தவர். அவ் வறுமை மிகுதியால் என்றும் கந்தலாடையைக் கட்டி யிருந்தார் அவர். அதனலேயே குசேலர் என்னும் பெயர் பெற்ருர். அவருக்கு இருபத்தேழு மக்கள். அவருடைய மனைவியாகிய சுசீலே, அம் மக்களோடு மிக்க வறுமைத் துயரை அனுபவித்து வந்தாள். குசேலரோ தம் வறுமையைப் பற்றிச் சிறிதும் கவலே. யின்றித் திருமாலைத் தியானம் செய்துகொண்டே இருந்தார். அது கண்ட சுசிலே, குசேலரை நோக்கி, நம் வறுமையைப் போக்க ஏதேனும் வழி தேடலாகாதா? கண்ணபிரான் தும்முடன் கலே பயின்ற ஒருசாலே மாணுக்கர் என்று சொல்லு கின்றிரே! அவர் வடமதுரை யாளும் மன்னராக இருக்கிருரே! அவர்பால் சென்று கிரம்பப்பொருளைப் பெற்றுவந்தால் கம் வறுமை அகலுமல்லவா?” என்று இடையிடையே நினைவூட்டுவாள். அப்பொழு தெல்லாம் குசேலர், 'பெண்னே! ஏன் வருந்துகிருய்? முற்பிறவியில் புண்ணியம் செய்தவர் இப்பிறவியில் இன்பம் பெறுகின்றனர் : பாவம் செய்தவர் துன்பம் அடைகின்றனர்; எல்லாம் வினைப்பயன். இதற் காக மனம் வருந்துவதில் பயனில்லை,” என்று கூறுவர். ‘மக்களுக் கிரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி தக்கமுற் பவத்தி லான்ற தருமதன் கியற்றி ஞேர்கள் ஒக்கவிப் பவத்தி லின்பம் ஒருங்கனுபவிப்பர் இன்றேல் மிக்கவெத் துயரத் தாழ்வர் இதற்குளம் மெலிதல் என்னே !? என்பது குசேலோபாக்கியானம்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/75
Appearance