பக்கம்:வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வள்ளுவர் இரண்டாயிரத்தில் வாழ்ந்து கொண்டிருக் கும் நாம் அவருக்கு விழா எடுப்பதில் முனைந்து நிற்கின் ருேம். கூடவே அண்ணல் காந்தி அடிகளின் நூற்ருண்டு விழாவும் இணைந்துள்ளது. அத்தகைய நல்லவர்தம் வாழ்க்கைத் தத்துவங்களை நாட்டிலும் ஏட்டிலும் விளம் பரப் படுத்தும் அளவுக்கு, நம் எண்ணத்திலும் வாழ்வி லும் மேற் கொண்டுள்ளோமா என்று எண்ணின் தலை குனியும் விடைதானே காணமுடியும். வள்ளுவர் காலத் தைக் காட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த இன் றும் மனிதன் ஒரு சிறு அளவிலும் தன் பண்பாட்டில் முன்னேறவில்லை என்பதை நாட்டு நிகழ்ச்சிகளும் உலக நிகழ்ச்சிகளும் காட்டுகின்றனவே. இந்த நிலையில் அன்பர் பலர் வள்ளுவருக்கு மலர் மாலை சூட்ட நினைத்தனர். எனது எழுத்தும் அம் மலர் களில் இடம்பெற எண்ணினர். அவ்வாருய எழுத் துக்களே இந்நூலில் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. ஒரு சில காலத்தால் முந்தியன. வள்ளுவர் வகுத்துக் காட்டிய வாழ்க்கை நெறியில் ஏதோ ஒரு சிறு பகுதியைத் தான் நான் இங்கே தொட்டுக் காட்டியுள்ளேன். இன் னும் காணவேண்டுவன பல. நல்லவர் கண்டு காட்டு வர். நாட்டவர் அவற்றைத் தம் வாழ்வில் மேற்கொண்டு வாழ வேண்டு மெனக் கேட்டுக் கொண்டு இந்நூலை உங்கள் முன் வைக்கின்றேன். தமிழ்க்கலை இல்லம் அன்புள்ள, சென்னை-30 ●,象 25—12–1969. அ. மு. பரமசிவானந்தம்