98 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
என்பதாக வள்ளுவர் கூறியிருக்கிறார்.
நல் வாழ் வை, நல் உயர்வை, அகத் தெளிவை யெல்லாம், ஆருயிருக்கு வலிமை சேர்க்க வேண்டுமென்று விழைபவர்கள், முதல் காரியமாக செய்ய வேண்டியது, குருவினைக் கண்டு, அவரை சேர்வது ஆகும். இந்த மூன்று பாடல்களும், குருவின் திருவடி அருகில் போய் ச் சேருகிற அறிவான முயற்சிகளைக் குறித்துக் காட்டுகின்றன.
அப்படிச் சென்று, சிறப்பான இடத்தைச் சேர்ந்தவர்கள், செய்ய வேண்டிய சீர்மையான செயல் முறைகளைத் தான், மேலும் தொடர வேண்டும் , தொடர்ந்து படர வேண்டும் என்பதாக, 5வது, 6வது குறள்களைக் கொடுத்திருக்கிறார்.
தன்னை வழி நடத்தும் தலைவரின் சொல் கேட்டு, நடக்க வேண்டும் என்பதுதான் தலையாய கடமையாக, மாணவருக்கு அமைகிறது .
குரு வாழ் கிற இடமானது, மாட மாளிகைகள் அல்ல. கூட கோபுரங்கள் அல்ல. மக்கள் வாழ்கிற இடங்களை விட் டு விலகி, இயற் கைப் பிரதேசங்களில், இருப்பதையே விரும்பினார்கள்.
அவர் மூழ்குவது ஏழ் கதிர். தோய் வது தூய்மையான காற்று. நீராடுவது அருவி. புகுவது புது மலர் பூத்த நறுமணச் சோலை. இருப்பது பசுமையான மரங்களின் கொழு நிழலில் படுத்துக் கிடப்பதோ பாறை. உயிர்ப்பது தூய்மை மிகு நறுமணம். குருவானவர்கள் குடியிருப்பு இப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இப் படிப் பட்ட இயற்கைச் சூழலில் , வாழ