உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

102

நல்ல உடலில் நல்ல மனம் என்றால், அதில் அருள் இருக்கும்.

நலிந்த உடலில் நலிந்த மனம் என்றால், அதில் இருள் இருக்கும்.

நலிந்தும் நைந்தும் போன உடலில் உள்ள மனம், நலிந்து நைந்து கிடப்பதால் தான், அங்கே இருள் மட்டுமல்ல, மருளும் நிறைந்து கிடக்கும்.

இங்கே இருள் சேர் இரு வினை சேரா என்ற சொற்களுக்கு நாம் காணவேண்டிய அர்த்தம், இந்த வலிமையான உடலில் இருந்தே தொடங்குகிறது.

இருள் என்றால் அறியாமை என்றும், மயக்கம் என்றும், துன்பம், குற்றம், ஆணவம் என்றெல்லாம் பொருள்கள் உண்டு.

இப் படிப் பட்ட இருளானது, மனதில் சேர்கிறபோது, உண்டாகும் நினைவுகள், நினைவுகளால் நிகழும் செயல்கள். அந்தச் செயல் களினால் விளையும் காரியங்கள் எல்லாம் , கொடுமையாகவும், கடுமை யாகவும் தானே அமையும்! -

இருட்டில் விளைவன ஒன்று முரட்டுத்தனமாக இருக்கும். அல்லது திருட்டுத் தனமாக இருக்கும். இருளில் நிகழ் வன அறத்திற்கு அப்பாற் பட்டவை! அவர் செயல்கள் எல்லாம் மறத்திற்கு உட்பட்ட வையாகவே மாறிப்போய்விடும்.

இருள் சூழ்ந்த இதயத்தில் ஏற்படுகிற எல்லாமே

அவச் செயல்களாகத் திகழும் என்பார்கள். அதைத் தான் தீக்குணம், தீச் செயல்கள் என்றும் கூறுவார்கள்.