பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

விளையும் என்ற ஒரு பழமொழியில் தந்தார்கள் நமது பெரியவர்கள்.

இதையேதான் இரண்டாகப் பிரித்து, நல்வினை, தீவினை என்றார்கள். மனம் இருளாகப் போனால் வருகிற நினைவுகள், அதனைத் தொடர்ந்து எழுகிற செயல்கள், விளைவுகள் பற்றி தீக்குணம், தீச்செயல் என்பதன் மூலம் அறிந்தோம்.

அது போலவே, நற் குணம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன என்றும் பார்க்கலாம்.

உண்மை உரைத்தல் , நல் வார்த் தை பேசுதல் , இனிய சொற்களால் கூறுதல் , பயன்தருகிற வார்த்தைகளைச் சொல்லுதல், அவற்றால் நிகழும் செயல்களில் ஆசைகளை அடக்கும் குணமும் , வெறியற்ற அருள் நினைவும், பற்றுகிற காமச் சிந்தனைகள் மாறி, சகோதரச் சிந்தனைகளும் , சமாதானச் செயல்களும் ஏற்படும்.

இவ்வாறு விதவிதமான வினைகள் நிகழ் வ தெல் லாம் , சுனைகள் போல் மனதில் ஊறும்

நினைவுகளால் தான்.

இப்போது நாம், இந்தக் குறளின் பொருளைப் பார்ப்போம். குரு அறிவுறுத்துகிறார். நல்ல உடலை வளர்த்துக் கொள்என்று, நல்ல உடலில் நல்ல மனம் வருகிறபோது, அங்கே இருள் சேர இடமில்லை. அதனால் மனதில் இருக்கும் நினைவும் செயலும் , இருள் சேராமல், இருக்கிறது.

இருள் சேரா என்று நாம் இங்கே சொற்களைச் சேர்க்கிறோம்.