உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் IO7

இரத்தமும், தேவைக்கு மிகுதியான உயிர்க்காற்றும் கிடைக்கிறபோது, மலர்ச்சியோடும் பொலிவோடும் விளங்கும். -

மன இறுக்கம் ஏற்படும் பொழுதெல்லாம், முகத் தசைகளில் இறுக்கம் ஏற் பட்டு விடுகிறது. இறுக்கப்பட்ட தசைகளுக்கு இரத்த ஒட்டம் சரியாகப் பாய் ச்சல் படாமல் போவதால், முகம் கறுத்துப் போகிறது. இருளடைந்தும் போய் விடுகிறது. அதனால் தான் தீயவர்கள் முகம் பார்த்தவுடன், இவர்கள் நல்லவர்கள் அல்ல என்ற குறிப்பை பறை

சாற்றி விடுகிறது.

இந்தக் காரணத் தை வைத்துக் கொண்டுதான், அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் என்று அறிவாளர்கள் பாடி வைத்தார்கள். இப் பொழுது இந்தப் பழமொழியின் பொருள் எளிதாக விளங்கும் என்று நம்புகிறேன்.

இப் படி அகத் தை முகந்து காட் டுவதால் தான் அதற்கு முகம் என்று பெயர்.

உடல் சேர்ந்த (பொருள் சேர்) வலிமையை மேன்மைப்படுத்தும் பொருட்டு (புகழ் புரிந்தார்), தலைவனாகிய குரு நாதரின் வழிகாட்டுதலுக்கேற்ப (இறைவன் மாட் டு) உடலை வளர்த்து வைத்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல எண்ணமும் நல்ல செயலும் (இரு வினை சேர்) சேரும் . அறியாமையும் துன்பமும், ஆணவமும் கலந்த இருள் மனம் சேராது. (இருள் சேரா)

இந்தக் குறளும், அடுத்து வருகிற 6வது குறளும், குருவின் போதனைகளைக் கேட்டு, செம் மாந்த