பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வாழ் வு வாழ தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்களாகத் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை வற்புறுத்தியே கூறுகின்றார் வள்ளுவர்.

‘இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு’

என்ற குறள், குருவைப் பின்பற்றி வந்துள்ள மாணவர்கள் (மக்கள்) முதல் தகுதியாக உடலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

உடலை வைத்துத் தான் உலக வாழ்க்கை என்பதை, வள்ளுவர் தெரிந்தவராதலால் , இந்தக் குறளை இப்படிப் பாடியிருக்கிறார்.

ஒரு மனிதர் மனம் போன போக்கிலே திரிந்தார். உணவைப் பெரிதாகக் கருதாமல் , ஒரு வாய் சோற்றுக்காக, இட்ட பிச்சையை நாய் போல நன்றி உணர்வுடன் அருந் தினார். எங்கு, எதில் , தனக்கு வேண்டியது கிடைக்கும் என்று நாயாய் அலைந்தார். பார்த்த பெண்களைத் தாயாகக் கருதினார். அடக்கமான மனதோடு சேய் போல இருந்தார். யார் அவர்?

பரமஞானி பட்டினத்தார் தான்.

பேப் போல் திரிந்து பிணம் போல் கிடந்து

இட்ட பிச்சை எல்லாம்

நாப் போல் அருந்தி, நரிபோல் உழன்று

நன்மங்கையரைத்

தாய் போல் கருதி, தமர் போல் அனைவர்க்கும்