உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் IO9

தாழ்மை சொல்லி சேப்போல் இருப்பவர் கண்டீர் உண்மை

ஞானம் தெளிந்தவரே

(பட்டினத்தார்)

அவர் பாடலில் உள்ள ஒரு குறிப் பை நாம் காண வேண்டும்.

உலகத்தில் பேயாக அலைந்தது. பிணம் போல் கிடந்தது. பசியை விரட்டி, கிடைத்ததை உண்டது என்பதையெல்லாம் உடல் வலிமையுள்ளவர்களே செய் கின்ற காரியங்கள். அதனால், அந்த உடல் வலிமையால் கிடைத்த பயன் என்னவென்றால் , உள்ளம் செம் மையடைந்தது. மனம் பக் குவம் அடைந்தது. அதனால் விளைந்த செயல்களில் பரிபூரணம் ஏற்பட்டது.

ஆமாம், கண்டதும் காம உணர்வுகளைத் துண்டும் நல்ல மங்கையரைப் பார்த்ததும், தாய் போல் எண்ணுகிற தன்மை நிறைந்த மனப் பக் குவம். உறவினர் போல உலகத் தினரை நினைக் கும் உள்ளத்தின் மாற்றம். அனைவரிடமும் தாழ்மையாக இருக்கிற சேய் போல, தன்னடக்கம்.

எப்படி ஞானம் பெற முடியும் என்கிற துன்பங்களையெல்லாம், அருமையான பாடல் மூலம் விளக்குகிறார் பட்டினத்தடிகள்.

இப்படிப்பட்ட உண்மை ஞானம் பெறச் செய்யும் கடுமையான காரியத் தைத் தான், குருவானவர், களிவோடு காட்சி தந்து, கருணையுடன் வழிகாட்டி, வழி நடத்தி வருகிறார்.