உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IIO டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

9. வலிமையின் விந்தைகள் (வித்தைகள்)

‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொப் தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழி வார் ‘ (6)

மீண்டும் மேன்மை மிகுந்த, கேண்மை நிறைந்த ஞான குருவானவர் காட் டுகின்ற கட்டுப் பாடுள்ள

வாழ்க்கையை வலியுறுத்துவதற்காக, இந்தக் குறளை எழுதியுள்ளார் வள்ளுவர்.

அறம் பெரிதாற்றி, அதன் பயன் செம்மையுடன் கொண்டு, சிறந்த தோர் உலகம் படைத்து வழிநடத்துகிற வல்லமை மிக்க குருவானவரின், திறம் கூறுகிற தெளிந்த கருத்தாகத்தான், இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ் வார் என்றுதான் எல்லா உரையாசிரியர்களும் பதம் பிரித்து, பொருள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.