பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் III

பொறி வாயில் ஐந்தவித் தான் என்றதுமே, அவ்வாறு அவிக்கும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்றுதான் பரிமேலழகரும் அவரைப் பின்பற்றிய உரையாசிரியர்களும் எழுதிச் சென்றுள்ளனர்.

கண்ணுக்குக் காட்சிதராத கடவுளுக்கு, அருவம் தான், உருவம் இல்லை. ஆனால் அவனோ, ஏகன் ஆகி, அநேகன் ஆகி, இறைவனாகி, விண் ணிறைந்தும் மண் ணிறைந்தும் கிடப் பவன் என்று திருவாசகம் காட்டுகிற தெளிபொருள் காட்சி இது. கடவுள் பற்றிய சாட்சிக் கவிதை.

தொன்மை யான் தோற்றம் கேடில் லாதான் என்று தேவாரம் எழுதிய சம்மந்தர் பாடுகிறார்.

ஆக, உருவமற்ற கடவுளுக்கு, ஐம் பொறிகள் எங்கே வந்தன என்று கேட்பது அறிவுடையார் பண்புதான். உருவமும் உயிருமாகி என்று அப்பர் பாடுவதால், எல்லோரும் நம்புகிற கடவுள், மனித வடிவெடுத்துத் தான், மன்பதையில் உலவுகிறார் என்பதும் ஒரு நம்பிக்கை.

நமது மதக் கலாச்சாரம், நம்மை அப்படித்தான் நம்ப வைத்திருக்கிறது.

மனிதர்கள் எல்லோரும் கடவுளின் சாயலாக படைக் கப் பட் டார் என்பதும் மதங்கள் கூறும் விளக்கங்கள் தான்.

இந்தப் பாடலில், பொறிவாயில் ஐந்தவித்தான்

என்பதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள் என்று பொருள் தருகின்றனர்.