114 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
நமது சிந் தையுள்ளே அன்பு, பண்பு தான் இருக்கும் என்று நினைத் திருந்தால் அது தவறு. அங்கே சிங்கங்களும், நரிகளும் யானைகளும் இருக்கின்றன என்று திருமூலர் பாடுகிறார் பாருங்கள்.
‘திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுக்குள் நரிக்குட்டி நான்கு வதைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக் கன்று ஐந்து’
(2174)
சிங்கங்கள் மூன்று என்பது காமம், வெகுளி, மயக்கம்
நரிகள் நான்கு என்பது, எண்ணம், மனம் ,
எழுச்சி, இறுப்பு
யானைக் கன்றுகள் என்பது செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு.
ஆக, ஐந்து பொறிகள் என்றால், அவை ஆபத்தின் வழிகள். அநியாயத்தின் துதுவர்கள், அடக்கமுடியாத கொடியவர்கள் என்று, அறிவு தெளிந்த எல்லோருமே பாடுகின்றனர். அவர்கள் பட்டப் பாடுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஐந்து பொறிகள் என்பது செவி, மெய் , கண், வாய் , மூக்கு ஆகும். இவற்றை அறிதற் கருவி என் பார்கள். இவை அறிகின்ற தன்மைகள் ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம், .
வாய் , கால், கை, எருவாய் , கருவாய் ஆகிய ஐந்தும் செய்கின்ற கருவிகளாகும். இவை செய்கின்ற காரியங்கள் நவிலுதல், நடத்தல், நலமுறக்