வள்ளுவர் வணங்கிய கடவுள் I2I
இங்கே வாயில் என்ற சொல் லை வள்ளுவர் பெய் திருக்கிறார். வாயில் என்றால் , வாசலில் அதாவது அதன் ஆரம்பத்திலேயே என்று அர்த்தம்.
தீயை பரவவிட்டுப் பிறகு அடக்கத் துடிக்காமல், அணைக்க முயலாமல் , அதன் தொடக்க நிலையிலேயே அழித்துவிடு, தொலைத்து விடு. அதுதான் அறிவுடையோர்க்குரிய செயலழகு என்பதை மிக சூட்சமமாக சொல்லியிருக்கிறார்.
சிங்கத்தை அதன் குகையிலேயே பிடி என்பது பழமொழி. மாடு பிடிக் கும் கலையில் , அது புறப்படுகின்ற கொட்டடியில் இருந்து பிடிப்பது தான், வெற்றிகரமான வழி என்றும் குறிப்பிடுவார்கள்.
மாடாகக் குதித்து, சிங்கமாக சீறி, பாம் பாகக் பயப்படுத்தும் பொறிகளை, அதன் முளையிலேயே, முனையிலேயே, கிள்ளி எறிவது போல அணைத்திட வேண்டும் என்பதற்காகத் தான், பொறி வாயில் அவித்தான் என்று பாடினார்.
பொய் தீர் ஒழுக்கம் : பொய் மையில் லாத, உண்மையான தவ ஒழுக்கம். அதாவது அற ஒழுக்கம்.
இங்கே பொய்தீர் என்ற வார்த்தையை, வள்ளுவர் ஏன் பயன்படுத்தினார் என்பதையும், இங்கே நாம் விரிவாகக் காண வேண்டும்.
பொய் என்பதற்கு போலி என்ற குறிப்புண்டு.
வள்ளுவர் காலத்தில், மக்களிடையே போலித் துறவிகள் நிறைய பேர் இருந்தனர் போலும் . மக்களிடையே மரியாதை பெற, பொருள் புகழ் பெற, தவத்தவர்கள் போல, அருள் மிகு துறவிகள் போல,