உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I26 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

போம் என்ற சித்தர் பாடலும்; பஞ்சப் பொறிகளை

நெஞ் சார அழிப் பதற்கு, ஆகிற சாத்தியமில் லை என்று குறிப்பதையும் இங்கே நினைவு கொள்ளலாம்.

சாதாரண மனிதன், துறவு கொள்ள விழையும் போதும் , துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று விழைகிற போதும், அவர்கள் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தை அகற்றி விட வேண்டும் , அவற்றை வெற்றி கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் வழியைக் காட்டி, அறிவுறுத்திப் பாடுகிறார்.

ஆனால் , துறவிகளுக்கும் , சித் தர்களுக்கும் குருவாக விளங்குகிற ஞான குருவானவர், ஐம் பொறிகளை அடக்கினால் போதாது. அவற்றின் ஆட்சியை அழித்து, ஆணவத் தை ஒழித்து, அகங் காரத்தை ஒடித்து, தன்னிடமிருந்தே அப்புறப் படுத்தி விட வேண்டும் என்பதற்காகத்தான், அவித்தான் என்ற சொல்லை, பொருத்தமாக எழுதிக் காட்டினார்.

ஐம்பொறிகளின் செயல்களை அவித்து விட்டால், என்ன வாழ்க்கை அது என்று நீங்கள் கேட்கலாம்.

அதுதான் தண்ணிரில் இருந்தும் மூழ் கி ப் போகாமல், மிதக்கும் ஆற்றல். மக்கள் கூட்டத்தில் இருந்தாலும், வாழ்க்கைக்குள் மூழ்கிப் போகாமல், வெற்றிகரமாக மேலே வீற்றிருக்கும் அரிய செயல்.

செத்தாரைப் போலத் திரியும் மெய் ஞ் ஞானி என்கிறார் குதம் பைச் சித்தர்.

நல்லதைக் காண, நல்லதைக் கேட்க, நல்லதைப் பேச, நன்மைகளைச் சுவைக்க, நல் லதற்காக