வள்ளுவர் வணங்கிய கடவுள் II
துறை என்பதை, அவர்கள் புரிந்து கொள்ளாதது தான் முதல் காரணம். முக்கிய காரணம்.
நீங்கள் புரிய வைத்திருக்கலோமே என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். புரிய வைக்க முயன்றேன். அவர்கள் பக்கம் என் கருத்துக்களைப் போக வைக்கின்ற ஆற்றலும், திறமையும் எனக்குப் போதவில்லை. விளம்பரம் என்றாலே ‘களம் பல காணவேண்டும். எனக்கேற்பட்ட சூழ்நிலை அப்படி அமைய வில்லையே!
எழுதித்தான் ஆக வேண்டும் என்ற எரிதழலிைல் என்னை இருக்கச் செய்கின்ற, இருத்தி வைக்கின்ற என் மதி. வயிற்றுப் பிழைப்புக்காக நீ அலைந்து திரிந்து இலக்கியப் பணிகள் செய்வதுடன், செய்து முடித்த நூல்களை அலைந்து விற்க வேண்டியது கட்டாயம் என்று அலைக்கழித்த கதி, அதுதான் என் விதி.
இந்த மதிக்கும் விதிக்கும் இடையே, நான் ஊதப் பட்டப் பஞ் சாக, உதைபட்டப் பந்தாக, இரண்டு யானைகளின் மோதல்களுக்கு இடையே சிக்கிய கயிறாக, உயிர்ப் போராட்டம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தான், முத்திரை குத்தியவர்களின் மாய நித்திரையை, என்னால் கலைக்க முடியவில்லை.
விளையாட்டு என்பது, ஆட்டமும் ஒட்டமும் மட்டும் கலந்து உருவான செயல்கள் அல்ல. அவை பல விஞ்ஞானங்களின் கூட்டு, அறிவியல் களின் சேர்க் கை, ஆற்றல் களின் தொகுப்பு. வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக விளங்குகின்ற வரைமுறையான தேர்ந்த செயல்கள், என்பதை என் நூல்கள் மூலமாக எழுதிக் காட் டினேன். அதாவது இலக்கியமாக.