உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 13I

அண்டாது, அலைக்கழிக்காது என்று அறிவுறுத்தவே, கடவுள் என்ற சொல்லைக் நாம் கொள்ள வேண்டும்.

கடவுள், தெய்வம் என்று சொன்னவுடனேயே, அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றுதான், எல்லோருக்கும் தெரியுமே!

அப்படி உயர்ந்து நிற்கும் கடவுளுக்கு, நிகரானவர் யார் என்று ஏன் கேட்க வேண்டும் அவருக்கு உவமை யாரும் இல்லையென்று ஏன் பேச வேண்டும்?

அப்படி ஒரு நிலையை, கடவுளுக்குக் கொடுக்கக் கூடாது என்று வள்ளுவர் அறியாதவரா? பிறகு ஏன் உரையாசிரியர்கள் எல்லோரும் கடவுள், கடவுள் என்று வற்புறுத்தி, வலியுறுத்தி, அதை நிலை நிறுத்தி விட, நூறாயிரம் சான்றுகளைத் தேடி ஏன் ஒடினார்கள்? இன்னும் ஒடுகின்றார்கள் என்றுதான் புரியவில்லை என்கிறார்கள் புரிந்தவர்கள்.

மனிதர் என்றால் அவர் திறமையானவர், அவர் திறமைக்கு ஏது நிகர்? ஏது உவமை ? ஏது சமானம் என்று பேசுவது இயல்பு தான்.

இங்கே வள்ளுவர் குறித் திருக்கும் ஞான குருவுக்கும் குருவாக விளங்கும் மோனகுருவுக்கும் விளக்கம் சொல்லவே, தனக் குவமை இல்லாதான் என்று பெருமையாகப் பாடுகிறார்.

தனக் குவமை என்ற சொல் லின், உவமை என்பதற்கு, ஒப்புமை, ஈடு, இணை, எதிர், சமம், சாயல், நிகர், நேர் என்றெல்லாம் பொருள்கள் உண்டு.

இங்கே எல்லையற்ற ஞானத்தினரான குருதேவர்,