பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஆற்றலால் உயர்வு பெற்ற பெரியார். செயற் கரிய செயல் செய்யும் சீராளர். வல்லமைக் கு வாழ் வளிப் பவர். உயர்வுக் கே உயர்வு தருபவர். அப்படிப்பட்டவர். வழங்குகின்ற வழிகாட்டுதலுக்கு ஈடு இணையே இல்லை . சமமும் இல்லை.

அத்தகைய ஆற்றலானது குருவிற்கு எப்படி வந்தது? விளைந்தது என்ற வினாவுக்கு விடை காண, நாம் வள்ளுவரைத்தானே நாட வேண்டியிருக்கிறது.

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் (23)

என்று துறந்தார் பெருமையில், சூட்சமத்தைத் திறந்து காட்டுகிறார்.

இருமை என்பதற்கு பிறப்பு, வீடு என்று குறிப் பார் பரிமேலழகர். நன்மை, தீமை என்று பேசுவார்கள் முற் போக் குச் சிந் தைனையுள்ள உரையாசிரியர்கள்.

இங்கே வள்ளுவர் குறித்த இருமை என்பது இரு மெய்களாகும். அந்த இரு மெய் யானது உள்மெய், புறமெய் என்பதாகும்.

இதை உடலுக்கு உள்ளேயும், புறத்தேயும் என்ற இங்கே நாம் பொருள் கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

2- L- GδΥ Gl) நான்கு விதமாகப் பிரித்துக் காட்டுவார்கள் சித்தர்கள்.

1. பருவுடல் 2. துண்னுடல் 3. போர்வை உடல் 4. முதலுடல்