உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 133

பருவுடல் : என்பது வெளிப்புறத்தைக் குறிப்பது. பருவுடலில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் புலன்கள் ஐந்து. இந்த ஐம்புலன்களின் வேகத்தையும், விளைகளையும், நாம் ஏற்கனவே முன்பகுதியில் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

துண்னுடல் : என்பது உட் புறத்தில் , உரத்து எழுகின்ற உணர்வுகளின் போராட்ட பூமியாகும்.

மனம், எழுச்சி, இறுப்பு என்பதுடன், ஒசை, ஊறு ஒளி, சுவை, நாற்றம் என்பதுடன் கூடிய எட்டுடனும் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை எல்லாம், அவற்றின் வகை தெரிந்து, அவற்றின் ஆதிக்கத்தை அழித்து, அடிமைப் படுத்தியதன் காரணமாக, அற நிலைக்கு உயர்ந்த அரியவர், செயல்களால் பெரியவர். ஆமாம் இந்த உலக மக்களின் வணக்கத்திற்கும் வாழ்த்திற்கும் உரியவர்.

அதனால்தான், அவர் யாருக்கும் இணையில்லாத, உவமை இல்லாத பேறு பெற்றவர்.

குரு என்றதும் , நமக்கு பல குருதேவர்களின் நினைவு வரும். அது இயல்புதான்.

அறிவினை விளக்கித் தெளிவளிப்பவர் குரு.

தெளிந்த அறிவின் தேர்ச்சியின் அறிவான ஞானத்தை அளிப்பவர் ஞானகுரு.

ஞானத்தின் ஞானமான மோனத்தை வழங்குபவர்

மோனகுரு. -

மோனகுரு என்றால், முதன்மையான ஞானம் கொண்டவர் என்பது பொருளாகும்.