உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஞானகுருவுக் கும் குருவாக விளங் கும் மோனகுருவுக்கு, யார் நிகராக இருக்க முடியும்?

நின்னிலும் சிறந்தவர் நீரே. நினக் குப் பிறர் உவமம் ஆகா என்று போற்றப் பட வேண்டிய பேராளர்.

அவரது தாள் சேர்ந்தார்க்கு என்று, அடுத்துவரும் சொல்லுக்குரிய அரும் பொருளையும் ஆய்ந்து பார்ப்போம்.

தாள் என்றால் திருவடி என்பார்கள். திருவடி என்றால் ஞானம் என்று பொருள் உண்டு.

சேர்தல் என்பதற்கு, இடைவிடாது நினைத்தல், நிந்ைது உருகுதல் என்றல்ெலாம் அர்த்தம் உண்டு.

தனக்கு நிகர் யாருமில்லாத குருவின் ஞானத்தை இடைவிடாது நினைத்து, அந்த நினைவிலே தோய்ந்து, அவரது அடியொற்றி சார்ந்து, சேர்ந்து, அவரது திறங்களைக் கற்று, வரங்களைப் பெற்று, வாழ்க்கை நெறியை வடிவாக அமைத்து உயர்த்திக் கொண்டவர்களுக்கு, மனக் கவலைகள் வராது. வந்தாலும் நிலைக்காது மாறிப் போகும்.

என்றாலும் வள்ளுவர் இந்தக் குறளில் பெய்திருக்கும் வார்த்தைகள் மனக்கவலை மாற்றல் அரிது என்பதாகும்.

மனக் கவலையை மாற்றல் அரிது என்பதால், மனம் இருக்கும் வரை, மனதிலே நினைவுகள் பிறக்கும் வரை, கரையானாக அரிக்கும் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும் என்ற வாழ்க்கையின் இயல்பை, மக்களின் பக்குவத் தை ஒட்டித் தான் பாடியிருக்கின்றார்.