உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 137

இடத்திற்கு மாற்றி வைத்தல் என்று கூறலாம்.

மனதிலிருக்கும் கவலையை, அங்கிருந்து மாற்றி வைக்கலாம். ஆனால், அதை எடுத் தெறிந்து விட முடியாது. அறவே நீக்கிவிட முடியாது என்பதையும், நாம் உணாந்திருக்கிறோம்.

இங்கே மாற்றுதல் என்றால் எதை எப்படிச் செய்வது என்பதையும், நாம் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம். -

மனதிற் குள்ளே எண்ணங்கள் எப்போதும் சுனையாகக் கிளம் பி, ஊற்றாக ஊறி, அலையாகப் புரண்டு, வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் வேலைகள் தான், வேகமாக நடந்தேறிக் கொண்டே இருக்கும்.

இப்படி அலைபாயும் நினைவுகளில், மெலிதான விருப்பம் பிறக்கும். அது அவாவாக பறக்கும். பிறகு, ஆசையாக வெடிக் கும். வெறியாக உடைக் கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த நினைவுகள் நல்லதாக இருந்தால், மனத்தில் கொஞ்சம் அமைதி பிறக் கும். சலனம் குறையும். சபலம் மறையும்.

வெறியும் வேகமும், எதிர்பார்ப்பும் ஏக்கமும் மனதில் கூடியிருந்தால், கவலைகள் வந்து, கூடு கட்டிக் கொள்ளும். பாடுபடுத்திக் கொல்லும்.

அப் படிப் பட்ட கவலைகளை, மனதிலிருந்து மாற்ற வேண்டும் என்றால், அவற்றை மாற்றுகின்ற பொருள், தகுதியானதாக ஒன்று இருந்தாக வேண்டுமே!

மாற்றுகிற காரியம் நடைபெறுகிற போது,