உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எவ்வளவு தூரம் போனது? எத்தனை பேர்களைச் சேர்ந்தது ? எப் படி அவர்களைப் பாதித்தது? போதித்தது என்னும் அளவு புரியவில்லை என்றாலும், என் எழுத்தில் ஏதோ இருக்கிறது. அது சமுதாயத்தின் எழுச்சிக்கு சங் கொலியாக ஒலிக்கிறது என்பதை மட்டும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறர்கள்.

விளையாட் டுத் துறை பற்றி எழுதத் தொடங்கினால், வந்து விழுவது தமிழ் இலக்கியத் துறை மட்டுமல்ல. விஞ் ஞானத் துறைகளான வேதியல் , பெளதிக இயல் , உயிரியல் , தத்துவத் துறையான உளவியல் , தத்துவ இயல் , உடல்துறையான உடல் அமைப்பு நூல், உடல் இயக்க நூல், உடல் இயக்கப் பயிற்சி நூல் என்று ஏராளமான அறிவியல் துறைகள்.

இப்படியாக வாழ்க்கைத் துறைகள் அனைத்தும் வந்து வழிபாடு செய்கின்ற துறையாக, விளையாட்டுத் துறை விளங் கி வருவதால், விளையாட்டுத்துறை பற்றி, வியந்து மகிழ்ந்து எழுதி வரும் எனக் கு, எல்லாத் துறையும் ஏற்ற துறைதான் என்ற உண்மை புரிந்தது.

விளையாட்டுக்களை ஆடுபவர்கள், சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களை விட, ஆற்றல் மிக் கவர்கள். பலரும் போற்றுதற் குரிய திறமை நிறைந்தவர்கள், வணங் குதற் குரிய வலிமை கொண்டவர்கள். நுணுக்கச் செயல்களும், நுண்மாண் நுழை புலமும் கொண்டவர்கள் என்பதெல்லாம், உலகம் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.

விளையாட் டாளர்களுக்கு, வலிமையும் திறமையும் சேர்ப் பது அதில் பெறுகின்ற