I38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
கவலைகள் மாற்றி வைக்கிற அந்த இடத்தில், தரமான நினைவுகளை வைத்தால் தானே, கவலைகள் நகர்ந்து இடம் கொடுக்கும். கவலை என்ற கல்லை நகர்த்த, பொருத்தமான சூழ்நிலையை மனதுக்குள் வைத்தாக வேண்டுமே வளர்த்தாக வேண்டுமே!
எடுக்கும் இடம் காலியாகிறபோது, கொடுக்கும் பொருள் மிடுக்காகவும், மேன்மையாகவும் இருந்தாக வேண்டுமே!
நேற்றின் கதவுகள் இரும் பாலானவை. அதை அசைக்கவோ, திருப்பவோ, நமக்கு ஏற்றாற் போல, திறக்கவோ முடியாது.
நாளைய கதவுகள் எங்கே இருக்கின்றன என்பது நாமறியாத ஒன்று. வழியில் லாத பயணத்திற்காக, இன்றே ஏன் வாடி, வருந்தி, வதங்க வேண்டும்?
இன்றைய பயணத்திற்கு எதிரே வழிகள். இயக்க முடிகிற கதவுகள். எதற்கும் ஒத்துழைக்கின்ற மன நுட்பாளிகள் எல்லாம், மனதை ஒரு நிலைப் படுத்த உந்தும் உற்சாக மீட்டல்கள்.
ஆக, கவலைகளை களையெடுப்பது போல, மனதுக்கு மாற்றுச் சிந்தனைகள் வழங்கும் வழி வகைகளைத் தான் குருவானவர் கற்றுத் தருகின்றார் என்ற நினைவையும் இங்கே குறித்துக் கொள்வோம்.
1. நடக் கின்ற பயண வழியில் , அடுத்து வைக்கின்ற கால டியை, தடத் தை மட்டுமே பார்ப் போம். துரத்தில் தெரிகின்ற, மங்கலான பாதையை உற்றுப் பார்த்து, விழித்து, விளங்காமல் வெறுப்புற்று வருந்துவது எதற்காக?
2. கையில் இருப்பதை வைத்து, கண்களுக்குத்