உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 141

11. ஞானமும் வலிமையும்

‘அற வாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற வாழி நீந்தல் அரிது’’ (8)

அறக் கடலாகிய அந்தணனது, தாளாகிய

புனையைச் சேர்ந்தார்க்கல்லது, அதனிற் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது என்கிறார் பரிமேலழகர்.

அறம் பொருள் இன்ப மென உடன் எண்ணப் பட்ட மூன்றனுள், அறத்தை முன்னர் ப் பிரித்தமை யின், ஏனைப் பொருளும் இன்பமும் பிற வெனப் பட்டன என்று மேலும் விரிவுரை வழங்குகிறார் பரிமேலழகர்.

‘அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது ‘ என்று குறளைப் பிரித்துப் பதம் காணுகிறோம்.

அற வாழி என்பதனை தர்ம சக் கரம் என்று சமயவாதிகள் பொருள் கூறுகின்றனர்.