பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அறக் கடலாக விளங்கும் அந்தணனின் தாளை சேர்ந்து கொள்ளா விட்டால், பிற கடல்களை நீந்திக் கடக்க முடியாது என்று முற் போக் குச் சிந்தனை யாளர்கள் பொருள் கூறுவார்கள்.

இந்தக் குறளில் எடுத்தாளப் பட்டிருக் கும் சுவையான சொற் சுனைகள் எவ்வளவு சுகமான இனிமையும், பொருண்மையும் கொண்டு விளங்குகின்றன என்று நாம் சிறிது சுவைத்துப் பார்ப்போமே!

அற ஆழி என்றவுடன், அறக்கடல் என்று அர்த்தம் நமக்குத் தெரிகிறது.

அறத் தின் கடல் என்பதாக, அற என்ற சொல்லுக்குப் பொருள் காண்கின்றனர்.

இங்கே, வள்ளுவப் பெருமகன், அறம் என்று கூறவில்லை. குறிக்கவில்லை. அற என்றுதான் தந்திருக்கிறார்.

அறம் என்பதை செய்தலும், விலக்கிய ஒழித்தலும் ஆம் என்று விளக்கம் கூறுகிறார்கள்.

மனு முதலிய நூல்கள் ஒரு சாராருக்கு வாழ்க்கைத் தரவும், புகழ் பாடுவதற்காகவும், படைக்கப்பட்டவை. அவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்வது, அடிமையாக வாழ்ந்து, அறியாமைக்குள் ஆழ்ந்து, அறிவிருந்தும் மனிதராக வாழ முடியாமல் , குழப்பச் சேற் றில் மூழ்கிச் சாகிற நிலைமையே சேரும் என்று அறிஞர் பலர் கூறுவதால், அவ் விளக்கத்தை நாம் இங்கே

விட்டு விடுகிறோம். -

நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டவே வள்ளுவர்