வள்ளுவர் வணங்கிய கடவுள் I45
கூர்கின்றனர். உலக நிலையின் உண்மை நிலையும்
இதுதானே!
அப்படியில்லை என்று, அந்தக் காலத்திலேயே, பிங்கல முனிவர் தன் நிகண்டில், நேரான பொருளைச் சொல்லியிருக்கிறார்.
அறுவகைப் பட்ட பார்ப் பனப் பக்கம் என்று தொல்காப்பியம் விளக்கம் தருகிறது.
‘ஓதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்றிவை ஆறும் ஆதிக் காலத்து அந்தணர் தொழிலே’
(பிங்கலம் 729)
அவர்களுக்கு தாமரை மாலை, வேதக் கொடி என்பதை மாலை கமலம் மறை கொடியாகும் (பிங்கலம் 730) என்றும்;
அவர்களின் தொழிலுக்கு உதவுகிற பொருளாக உள்ளவை தருப்பையும் முஞ் சியும், சமித்தும் அவர்க கே (பிங் கலம் 731) என்றும் விளக்கி யிருப்பதைக் காணலாம்.
அந்தணர் அவர்க்கே வேதமார்க்கம் (பிங்கலம் 2091) என்பதையும் இங்கே நாம் புரிந்து கொண்டால் குழப்பம் தீர்ந்து போகும்.
அறிவாண்மையாலும், ஆன்ற சான்றாண்மை யாலும், சீரிய பண்பாண்மையாலும், நேரிய அருளாண்மையாலும் நிமிர்ந்து நிற்கும் குருவானவர் தான், அந்தணர் என்று இங்கே குறிக்கப்படுகின்றார். அவர்களிலிருந்து அறிவாண்மையும் செந்தண்மையும்