உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கொண்டவர்களே இந்த அந்தணர்கள் என்று பிரித்துக் காட்டவே அந்தணர் என்று கூறியிருக்கிறார்.

அறம் புரி அருமறை அந்தணர் என்று ஐங் குறு நூறு புகழும். மனித குலத்திற்கு அறத்தையும் , உயர்வாக்குதற் குரிய உண்மை மறைபொருளையும் விளக்குகின்ற மாண்பாளராகத் தெரிவிக்கிறது.

அத்தகைய அந்தணர்களுக்கு அருளானது குடையாக விளங்குகிறது. அறமானது செங்கோலாகத்

திகழ்கிறது.

அதனால்தான், அந்தணர் என்பவரை அறவாழி ஆள்வோன் என்று மணிமேகலை புகழ்ந்து பேசுகிறது.

இத்தகைய பேராண்மை மிக்க அந்தணராகிய, குருவிற்கு, அத்தனை பேர்களையும் அரவணைத்துக் கொள்கின்ற, ஆதரித்துச் செல் கிற பண்புகளைக் குறிக்க, அந்த சொல் லே அறிவுப் பூர்வமாக உருவாக்கப் பட்டிருப்பது போலல்லவா தெரிகிறது!

அம் தணன் = அந்தணன் என்று பிரிப்பார்கள்.

தணன் என்றால் தீ போன்றவன். அம் என்றால் அழகு என்றும், நீர் என்றும் பொருள் உண்டு.

அந்தணராக விளங் கும் குருவானவர், தணலாகவும் இருக்கிறார். தண்ணிராகவும் இருக்கின்றார்.

அதாவது தட்ப வெப்பம் நிறைந்த மண்ணுலகம் போல, மழையையும் ஒளியான வெம்மையையும் தருகிற விண்ணுலகம் போல; குருவானவர் திகழ்கிறார்.