உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 13

பயிற்சிகளும், முயற்சிகளும் மட்டுமல்ல. அவர்களை வளர்த்து, வளர் திறமைகளில் களம் புகச் செய்ய வைக்கும் பெருமையானது, பிராண வாயுவை. சுவாசிக்கும் பேராற்றலால் தான். . . . . . .

பிரணனாக விளங்கும் பிராண வாயுவை, அளவுக்கு மேல் சேர்த்து, அடக்கி வைத்து , ஆட்சி செய்கின்ற ஆற்றல் கொண்டவர்களால் தான், இந்த் அகிலத்தில் அரும் பெரும் காரியங்களை ஆற்ற். முடிகிறது என்பது, பெரியோர்கள் போற்றி, ஏற்றுக் கொண்ட உண்மைக் கருத்தாகும்.

விளையாட்டுக்களில் மட்டுமல்ல. வாழ்க்கை யிலும் பல மேன்மைகளையும் மேம்பாடுகளையும் காண, கை கொடுத்து உதவுவதுடன், கைதுக்கி உதவுவதும் பிராணாயாமம் தான். .

இப்படிப்பட்ட பிரணாயாமத்தின் பேராற்றலை பெரிது படுத்தி, அரிது அரிது இதைப் பின்பற்றல் அரிது என்று பலர் ப்ேசிப் பேசி, அரண்டு மிரண்டு போயிருக்கின்ற காரியங்களை எல்லாம் அரிதாக செய்து முடித்து செய்தற்கரிய செயல்களைச் செய்த பலர் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

நாளையும் இருப்பார்கள்.

காரணம், உள்ளே இழுக்கின்ற சுவாசம் தான் உயிர்ப்பாகி, உணர்வாகி, உந்திக் கமலத்திலிருந்து சிந்துவாகி, கங்கையாகி, களிப்பின்ையும், மலர்ச்சி யையும், எழுச்சியையும் அளிக்கிறது:

அதையே உயிராக மதித்து, இரவு பகலாய்

துதித்து, இடர்படுத்துகின்ற புலன்களை மதித்து, மூண்டெழச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று,