148 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
கடலை நீந்துதல் என்றார். நீந்துதல் என்றால் கடல் என்று தான் அர்த்தம். -
பிற ஆழி என்றால் பிற கடல்கள் என்று பொருள் என்றால், முதலில் அற ஆழி என்றதனால், நமக்கு பிற கடல்கள் எளிதாகவே தெரிகிறது.
பிற கடல் என்பது வாழ்க் கையில் வந்து வாட்டுகின்ற துன்பங்களை எல்லாம் துன்பக் கடல்; துயரக் கடல், தீமைக் கடல், தொல்லைக் கடல் என்று பல கடல்களாகக் கூறுவார்கள்.
மனதை மகிழ் விக்கின்ற நிகழ்ச்சிகளை, அன்புக் கடல், பண்புக் கடல் , அருட் கடல் , அறிவுக் கடல், அறக்கடல், பொருட்கடல் என்றும் கூறுவார்கள்.
ஆகவே, இப்படிப்பட்ட கடல்களை யெல்லாம் நீந்த வேண்டும் என்றால் , அகிலத்து சொந்த பந்தங்களை, ஆசாபாசங்களை, பொருள் இன்பம் போன்றவற்றை யெல்லாம், அறவே ஒழித்து, முற்றும் துறந்த செந் தண்மை மிக்க அந்தணரான, மோன குருவின் ஞானத்தைப் பெற்று, அவர் வழி சார்ந்து, அயராமல் நடந்திடவேண்டும்.
இதுவரையில் , குருவிடம் சென்றால் என்ன பெறலாம் ? எப்படி பெறலாம் ? அதனால் என்ன நன்மைகள் கிடைக் கும் என்ற ஞானத் தின் உண்மையை உரைத்துக் கொண்டே வந்தார் வளளுவா. \ A
கற்றதனால் பெற்ற அறிவினால், குருவின் ஞானத்தைப் பெறவேண்டும் என்றார்.
அப்படி பெறுகின்ற ஞானத்தின் பயனால்