பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I5O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதுதான் எதிர் நீச்சல் என்பதாகும். இந்த எதிர் நீச்சல் முறையைத் தான் வள்ளுவர் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறாார்.

நீந்தல் என்ற சொல்லுக்கு, கடத்தல் என்றும் வெல்லுதல் என்றும் அர்த்தமாகும்.

கடத்தல் என்றால், தாண்டல், பாய்தல், மீறுதல், மேற்படுதல், செலுத்துதல் , நேரே பொருதல் என்ற பொருள்களை அறியும் போது, நீந்தும் செயலுக்கு, இத்தனை முயற்சிகளும் தேவைப்படுகிறதே!

இத்தனை முயற் சிகளையும் செய்து, எதிர்த்து நீந்த, உடல் வலிமையோடு இருந்தால்தானே முடியும்!

நீந்துவதற்கு வலிமையான கைகள், வலிமையான கால்கள், மூச்சடக்கும் திறன், தளராத மனம், துணிந்து முன்னேறும் உற்சாகம், உத்வேகம் , துரத் தைக் கடக்கும் ஆர்வம் , அந்த ஆர்வத்தால் , எழும் எதிர்ப்புகளை எதிர்த்துப் பொருதல், போராடுதல் எல்லாம் வேண்டுமல்லவா!

ஆறுகளிலும், குளங்களிலும், ஊருணிகளிலும், ஏரிகளிலும் நீந்துவது எளிது. அங்கே தண்ணிரின் ஒட்டம் குறைவாக இருக்கும். வேகம் இருக்கும். அவற்றை எளிதாக சமாளித்து நீந்த முடியும்.

ஆனால், ஆழம் நிறைந்த ஆழி இருக்கிறதே! பரந்து விரிந்த கடல் இருக்கிறதே! அந்தக் கடல் காண்பவர்களை அச்சப்படுத்துவதே, அது எழுப்பும் அலைகளால் தான்.

பயமுறுத்துகின்ற அலை, பாய்ந்து நீந்த வருபவர்களைப் பல ஹீனப் படுத் தி, விரைவில் சோர்ந்து போகச் செய்து விடும்.