வள்ளுவர் வணங்கிய கடவுள் 151
அப்படிப்பட்ட சோர்வு வந்து விட்டால், தீர்வு காண முடியாமல் தோல் வியைத் தானே சந்திக்க வேண்டும்! அதனால்தான் வலிமையும் வேண்டும் என்பதை, மறைமுகமாக வலியுறுத்தியிருக்கிறார்.
நீந்தல் அரிது என்பதால், நீந்தவே முடியாது கடக்கவே முடியாது. கரையை அடைய முடியாது. வினைகளில் வெற்றி பெற முடியாது.
ஆகவே, ஞானமும் வலிமையும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும் என்பதையே, இங்கே கோடிட்டுக் காட்டுகிறார்.
வலிமையில் லாத தேகம் வாழ்க் கைக் குப் பயன்படாது. தெளிவில்லாத ஞானம், குழப்பத்தை உண்டாக்கி, தேறாமல் செய்து விடும்.
இப் படி ஒரு கருத்து, இந்தக் குறளில் எப்படி வரும் என்ற ஒரு சந்தேகத்தை, நீங்கள் கேட்கலாம். நியாயம் தானே!
இதை அடுத்து வருகிற ஒன்பதாவது குறளில், ஐம்பொறிகள் பற்றிப் பாடி, அவை அவற்றிற்கு உரிய பணியை செய்யாவிட் டால் , அவற்றால் பயனேது என்று வள்ளுவர் ஒரு வினாவை எழுப்புகின்றார்.
ஆழி என்பதற்குரிய விளக்கத்தை ஆழியும் கடலும் என்ற பகுதியில் காணவும்.
ஐம்பொறிகள் அவற்றின் ஆற்றலை, செயல்படும் வலிமையை இழந்தால், அவற் றால் பயனேது என்கிறார்.
அதுபோலவே, ஐம் புலன்களை தன் புறத் தே