உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I53

12. தலையாய தலை

‘கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை’ (9)

தித்தமக்கேற்ற புலன்களை, கொள்கையில்லாத

பொறிகள் போல, பயன்படுதல் உடையவை அல்ல; எண் வகைப் பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங் காத தலைகள் என்பது பரிமேலழகர் உரையாகும்.

எண்ணிலடங்கா நிறைந்த பண்புகள் பல வற் றையும் உடைய, அறிவாற்றலின் சிறந்த சான்றோரைப் போற்றிப் புகழ்ந்து வணங்காதவர்கள், ஐம் புலன்களையும் இழந்த ஐம் பொறிகள் போல, பயனற்றவர் ஆவர் என்பதும்; எட்டு குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங் காத தலைகள், கேளாத செவி முதலியவை போல பயனற்ற வையாகும் என்று பலரின் கருத்துரைகள், தெளிவுரையாக வந்திருக்கின்றன.

வள்ளுவர் பெருமான் கூற வந்த கருத்து என்ன என்பதையும் தொடர்ந்த காண்போம்.